காலந்தோறும் விரவுத்திணை

04:34 Posted by திருத்தமிழ்




காலந்தோறும் விரவுத்திணை

 மு.தேவகி
முனைவர்பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை  காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகம்
காந்திகிராமம் - 624 302




          ஒரு மொழியைப் பற்றித் தெளிவாக அறிவதற்குத் துணையாக இருப்பனவற்றுள் முதன்மையானது இலக்கணம் ஆகும். தமிழ் மொழியின் தொன்மைக்கும் பெருமைக்கும் சான்றாக இருப்பது இலக்கணமேயாகும். மொழியினையும் மொழியின் வழியாய்ச் செய்தியினையும் உணர-உணர்த்த இலக்கணம் இன்றியமையாததாய் அமைகிறது. படிப்பறிவு இல்லாப் பாமர மக்களும் இலக்கணத்தோடுதான் பேசுகிறாரகள். அவன் நாளை உண்டான் என்றோ அவன் நேற்று வருவான் என்றோ யாரும் பேசுவதில்லை. ஒவ்வொரு மொழியும் தனக்கென ஓர இலக்கணத்தைக் கொண்டுள்ளது. ஆற்றிற்குக் கரைபோல மொழிக்கு இலக்கணம் அமைகிறது எனலாம். ஆற்றிற்குக் கரை இல்லாவிடிலோ ஆற்றின் மூலமாய்க் கிடைக்க வேண்டிய ஆக்கம் கிடைக்காமற்போவதுடன் எதிரபாராத கடுமையான அழிவும் வந்துசேரும். எனவே மொழியைக் கட்டிக்காக்கவும் மொழிதரும் பயனை மேலும் மிகுவிக்கவும் இலக்கணம் தேவையாகின்றது


           தமிழ்மொழி உலக மொழிகளுள் பழமையும் புதுமையும் ஒருங்கே அமைந்த சிறப்புப் பொருந்திய மொழியாகும்.  தமிழ் இலக்கண நூல்களில் பல்வேறு நுட்பங்கள் காணக்கிடக்கின்றன. மொழியியலை அடிப்படையாக வைத்து இலக்கண நூல்களை ஆராயுங்கால் அவற்றின் நுட்பங்களும் பெருமைகளும் பளிச்சிடுகின்றன. தமிழ் இலக்கணங்கள் எழுத்துக்களின் அமைப்பு பிறப்புப் பற்றி எழுத்ததிகாரத்தில் விளக்குகின்றன. எழுத்துக்களால் உருவாகும் சொல் அவற்றின் அமைப்பு பாகுபாடு பற்றிச் சொல்லதிகாரம் குறிக்கின்றது. இலக்கணங்கள் எழுத்து சொல் பொருள் என்ற தொடர நிலையிலேயே மொழி அமைப்பை விளக்குகின்றன. மொழியில் எழுத்துகளுக்கு அடுத்துச் சொல் பெறுகின்றது. சொற்கள் மொழியின் அமைப்புகளையும் சிறப்புக்களையும் விளம்புகின்றன.

மொழி
      

               தொல்காப்பியர் தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கிய விமரசனக் கலைக்கும் அளித்துள்ள பெருங்கொடையே தொல்காப்பியமாகும். தொல்காப்பிய மரபைப் பின்பற்றியும் மொழி வளரச்சிக்கேற்ப புதிய மாற்றங்களையும் புதுமையான கருத்துக்களையும் சேர்த்துக் கூறின. சொல்லிலக்கணத்தில் செய்யப்படும் ஆய்வு தமிழ் மொழியின் கட்டமைப்புச் சிறப்பை எடுத்து வைக்கின்றது.       மனிதன் தன்னுடைய கருத்தினைப் பிறருக்கு அறிவுறுத்தப் பயன்படும் கருவியே மொழி. பேச்சொலிகளே மொழியின் அடிப்படைக் கூறுகள். மொழி மனிதனின் உள்ளத்தைப் புலப்படுத்துதற்குரிய பல்வகை முறைகளையும் தன்னகத்தே கொண்டது. ஆயினும் அச்சொல்லினுடைய தோற்றுவாய் அதனுடைய அடிப்படைப் பயன்பாட்டினைக் காட்டுகின்றது. 


                      மொழி (Language) என்னும் சொல் நாக்கினைக் குறிக்கும் லிங்க (Linga) என்ற இலத்தீன் சொல்லிலிருந்து உருவாகியது என்கிறது கலைக் களஞ்சியம். ஆங்கிலத்திலும் நாக்கினைக் குறிக்கும் டங் (Tongue) என்னும் சொல் மொழியை உணரத்துகின்றது. மொழியப்படுவதனால் தமிழிலும் மொழியெனப்படுகின்றது.


        ”கூட்டுத் தொழிலில் இரு அம்சங்கள் உள்ளன. ஒன்று உடல் நிலைப்பட்டது மற்றது வாய்மொழி வருவது. உடல்நிலைப்பட்ட அசைவியக்கம் நடனத்துக்கும் வாய்நிலைப்பட்டது மொழிக்கும் காலாக அமைந்தது” எனக் கா.சிவத்தம்பி மொழியின் தோற்றுவாயை விளக்குகின்றார்.     


                      வாய்மொழியாக வழங்கப்பட்ட மொழி எதிரகாலத்தில் பயன்பட வேண்டிய இன்றியமையாமை காரணமாக எழுத்து வடிவமும் பெற்றது. நிகழ்ச்சிகளை ஒருவன் நேரே கண்ணுறாவிடினும் மொழியின் வாயிலாக அவற்றின் விளைவுகளை நன்கு அறிந்து கொள்ளலாம்.     

You can leave a response, or trackback from your own site.

0 Response to "காலந்தோறும் விரவுத்திணை"

Post a Comment

காணொளிக்காட்சிகள்